திருவட்டார் அருகே கல்லூரி மாணவி கடத்தல் வாலிபர் மீது வழக்குப்பதிவு

திருவட்டார் அருகே கல்லூரி மாணவியை கடத்தியதாக வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-03-07 22:15 GMT
திருவட்டார்,

திருவட்டார் அருகே உள்ள பிலாங்காலை மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்த மாணவி ஒரு கல்லூரியில் பி.எட். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வழக்கமாக கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

அதே போல் சம்பவத்தன்றும் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு அவர் சென்றார். ஆனால் அதன்பிறகு மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் மாணவியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து மாணவியின் தாயார் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் முளகுமூடு பகுதியை சேர்ந்த மெர்லின்(வயது 20) என்பவர் தனது மகளை கடத்திச்சென்றதாகவும், அவரை மீட்டு தரும்படியும் கூறியுள்ளார்.

விசாரணை

அதன்பேரில், மெர்லின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரையும், மாணவியையும் தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்