பெரியார் சிலை விவகாரம்: எச்.ராசா உருவபொம்மை எரிப்பு தி.மு.க.–ம.தி.மு.க.வினர் போராட்டம்
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராசா உருவபொம்மையை தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. கட்சியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி,

தென்காசி
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல தமிழ்நாட்டில் உள்ள பெரியார் சிலைகள் உடைத்து அகற்றப்படும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராசா தனது முகநூலில் கருத்து பதிவு செய்தார். இதற்கு அனைத்து கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று காலையில் தென்காசியில் உள்ள தி.மு.க. மேற்கு மாவட்ட அலுவலகம் முன்பு அந்த கட்சியினர் திரண்டனர். அங்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் தலைமையில் தி.மு.கவினர் எச்.ராசாவை கண்டித்தும், அவரை போலீசார் கைது செய்ய வலியுறுத்தியும் கொஷங்கள் எழுப்பினர். பின்னர் அவருடைய உருவ படத்தை தி.மு.க.வினர் எரித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர், நகர செயலாளர் சாதிர், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சாமித்துரை உள்பட 35 தி.மு.க.வினரை தென்காசி போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் பஸ்நிலையம் அருகிலுள்ள ஒரு தனியார் லாட்ஜ் முன்பு தி.மு.க. மற்றும் ம.தி.மு.க.வினர் திரண்டனர். எச்.ராசாவுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. அவரை போலீசார் கைது செய்ய வலியுறுத்தி தி.மு.க. நகர செயலாளர் சங்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் லாலா என்ற சங்கரபாண்டியன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், ம.தி.மு.க. நகர செயலாளர் ஆறுமுகசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்த கட்சியினர் திடீரென எச்.ராசாவின் உருவபொம்மையை ரோட்டில் போட்டு தீவைத்து எரித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. தொடர்ந்து சிறிது நேரம் கண்டன கோஷங்களை எழுப்பிய இரு கட்சியினரும் பின்னர் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் தி.மு.க நிர்வாகிகள் சேகர், சங்கர், ராஜதுரை, குமார், ம.தி.மு.க. நிர்வாகிகள் பொன்னுச்சாமி, நயினார் உள்பட ஏராளமான தி.மு.க. ம.தி.மு.க தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை
செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நகர தி.மு.க. சார்பில் எச்.ராசா உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகர தி.மு.க. செயலாளர் எஸ்.எம்.ரஹம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சேக்தாவூது, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் பேபிரெசவு பாத்திமா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் பால்அய்யப்பன், கல்யாணி, நகர மாணவரணி அமைப்பாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். எச்.ராசா உருவபொம்மை எரித்த நகர செயலாளர் உள்பட 10 தி.மு.க.வினரை செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் கைது செய்தார்.