சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 13 பேர் காயம்
அணைக்கட்டு அருகே வரதலம்பட்டு கிராமத்தில் நடந்த மாடுவிடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 13 பேர் காயம் அடைந்தனர்.
அணைக்கட்டு,
அணைக்கட்டு தாலுகா வரதலம்பட்டு கிராமத்தில் நேற்று காளை விடும் திருவிழா நடந்தது. இதில் கலந்து கொள்ள வேலூர் கொணவட்டம், ஆலங்காயம், வாணியம்பாடி மற்றும் பல்வேறு பகுதிகளிலில் இருந்து 132 காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
காளைகள் ஓடவிடப்படும் தெருவின் இருபுறமும் சவுக்கு கம்புகள் கட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காளைகளை விரட்டுவதற்கும் அவற்றை தொடுவதற்கும் இளைஞர்கள் ஆர்வத்துடன் திரண்டிருந்தனர். விழாவை வேடிக்கை பார்ப்பதற்காக வீடுகளின் மாடிகளிலும், சுவர்களிலும் பொதுமக்கள் நின்றிருந்தனர்.
காளைகளை ஒடுகத்தூர் கால்நடை மருத்துவர் சுந்தரமூர்த்தி மற்றும் உதவி மருத்துவர்கள் பரிசோதித்து தகுதியானவற்றை போட்டியில் கலந்து கொள்ள அனுமதித்தனர். விழாவை அணைக்கட்டு தாசில்தார் குமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து வாடிவாசலில் இருந்து தெருவில் காளைகள் விடப்பட்டன. சிறுத்தைகள் போல் பாய்ந்த காளைகள் போட்டி போட்டுக்கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து ஓடின.
இளைஞர்களின் ஆரவாரத்தில் சில காளைகள் மிரண்டு தெருவில் அங்குமிங்குமாக ஓடின. சில காளைகள் பாதுகாப்பு தடுப்பு கம்புகளை தாண்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வாலிபர்களை முட்டி தூக்கி வீசியது. இதில் 13-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 3 பேர் ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மற்றவர்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் பார்த்தீபன், வினோத், சாந்தினி தலைமையிலான மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
முதல் 32 இடங்களை பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒடுகத்தூர் வருவாய் ஆய்வாளர் குமார். கிராம நிர்வாக அலுவலர்கள் ஸ்ரீராஜ், நந்தகுமார் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வரதலம்பட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.