செங்கம் அருகே அம்பேத்கர் சிலை அகற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கம் அருகே உள்ள தோக்கவாடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை போலீசார் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-06 22:45 GMT
செங்கம்,

செங்கம் அருகே உள்ள தோக்கவாடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை போலீசார் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்த நிலையில் அம்பேத்கர் சிலையை அகற்றியதை கண்டித்தும், பொதுமக்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும் நேற்று பல்வேறு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செங்கம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்றது. அப்போது மீண்டும் அம்பேத்கர் சிலையை அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், டி.டி.வி. தினகரன் அணியினர் உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்