குறைதீர்வு கூட்டத்திற்கு வரும்படி மேளதாளத்துடன் அதிகாரிகளை அழைத்து வந்த விவசாயிகள்

குறைதீர்வு கூட்டத்திற்கு வரும்படி தாம்பூலம் வழங்கி மேளதாளத்துடன் அதிகாரிகளை அழைத்து வந்த விவசாயிகள் நூதன போராட்டத்தால் பரபரப்பு.

Update: 2018-03-06 22:45 GMT
செங்கம்,

செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காலை 11.15 மணி வரை சில துறையை சேர்ந்த அதிகாரிகள் வரவில்லை. மேலும் ஒவ்வொரு முறை விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடக்கும்போதும் சில அதிகாரிகள் வராமல் இருந்தனர். இதனால் விவசாயிகளுக்கான கோரிக்கைகள் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்ல முடியவில்லை என விவசாயிகள் கூறினர். இந்த நிலையில் நேற்று நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு வராத அதிகாரிகளை மேளதாளத்துடன், பூ மாலை, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் அடங்கிய தாம்பூலம் வழங்கி மாலை அணிவித்து விவசாயிகளே அழைத்து வரும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செங்கம் வட்டாரவளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்