திருநள்ளாறு தொகுதியில் ரூ.1 கோடி செலவில் திட்டப் பணிகள், அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்
திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில் 11 இடங்களில் சாலைப் பணி உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.;
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில், புதுச்சேரி எம்.பி. ராதாகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சம் மற்றும் திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ. கமலக்கண்ணன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதில் தென்னங்குடி நடுத்தெரு மேம்படுத்துதல், குமாரக்குடி மேலத்தெரு மேம்படுத்துதல், நல்லம்பல் பள்ளிக் கூடத் தெரு மற்றும் வடக்குத் தெருவை மேம்படுத்துதல் ஆகிய சாலை பணிகள் நடைபெற உள்ளன. அதேபோல் பத்தக்குடி சேறு வாய்க்கால் குறுக்கே மதகு கட்டுதல், பத்தக்குடி வடக்குத் தெரு மற்றும் மேலத்தெரு சாலை மேம்படுத்துதல், அம்பகரத்தூர் அய்யன்குளம் மற்றும் பழைய ரெயிலடித் தெருவை மேம்படுத்துதல், திருநள்ளாறு முப்பைத்தங்குடி வடக்குப்பேட் மற்றும் தெற்குப் பேட் சாலையை மேம்படுத்துதல், நல்லம்பல் பகுதி எல்.ஜி.ஆர். நகர் குடியிருப்பு பகுதியில் சாலை உருவாக்குதல் மற்றும் குடிநீர் குழாய் பதித்தல் உள்ளிட்ட திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
இந்த திட்டப்பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜசேகரன், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில், நிருபர்களிடம் அமைச்சர் கமலக்கண்ணன் கூறியதாவது:-
திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில் ரூ.1 கோடியில் 11 இடங்களில் சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் 4 முதல் 6 மாத காலத்திற்குள் முடித்துவிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான சாலையை மேம்படுத்த, நபார்டு வங்கியில் கடன் தொகை ரூ.11 கோடியே 80 லட்சம் பெறப்பட்டு பூமி பூஜை செய்யப்பட்டுள்ளது. சாலை மேம்பாட்டுக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள், மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிந்ததும் அடுத்த ஓர் ஆண்டிற்குள் பணி முடிவுக்கு வரும் என்றார்.