பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கூட்டுறவு வங்கியை கட்சியினர் முற்றுகை
திருத்துறைப்பூண்டி அருகே கச்சனத்தில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
2016-17-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கொத்தங்குடி, அய்யூர், தொழுதூர், பனங்காடி, கச்சனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்தும், உடனடியாக பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருக்குவளை தாசில்தார் சுந்தரி, இன்ஸ்சூரன்ஸ் நிர்வாக அதிகாரி தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வருகிற 31-ந் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.