வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்த வாலிபர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.3 கோடி அளவில் பணம் பெற்று மோசடி செய்த வாலிபரை, பாதிக்கப்பட்டவர்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தேனி,
தேனி பழைய டி.வி.எஸ். சாலையில் அமீர்உசேன் என்பவருடைய மகன் ஹக்கீம் பாட்ஷா (வயது 29) என்பவர், வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் அலுவலகம் நடத்தி வந்தார். அவர் பலரிடம் லட்சக்கணக் கில் பணம் பெற்றுவிட்டு, வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பாதிக் கப்பட்ட சிலர் புகார் கொடுத்து இருந்தனர்.
புகார் அளித்த நிலையில், அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தேனி பங்களாமேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஹக்கீம் பாட்ஷா நின்று கொண்டு இருப்பதை, அவரால் பாதிக்கப்பட்ட சிலர் பார்த்துள்ளனர். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவரை தேனி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் அவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர், இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர்களிடம் ஹக்கீம் பாட்ஷாவை ஒப்படைப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளதாக கூறி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
இதில், ஆண்டிப்பட்டி அருகே உள்ள எட்டப்பராஜபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் குபேந்திரன் (33) அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து, ஹக்கீம் பாட்ஷாவை கைது செய்தார்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், தென்கொரியா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடமும் பணம் பெற்று மோசடி செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இதுவரை வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 100 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இதில், 67 பேர் குறித்த பட்டியல் கிடைக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொருவரிடமும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3½ லட்சம் வரை பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் ரூ.3 கோடி அளவில் மோசடி நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாரும் இருந்தாலும் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுக்கலாம்’ என்றார்.