ஒரகடம் அருகே குடோனில் பயங்கர தீ விபத்து

ஒரகடம் அருகே குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தை அடுத்த வைப்பூர், காரணைத்தாங்கல் பகுதியில் தனியார் குடோன் உள்ளது.

Update: 2018-03-06 22:45 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தை அடுத்த வைப்பூர், காரணைத்தாங்கல் பகுதியில் தனியார் குடோன் உள்ளது. இந்த குடோனில் ரப்பர் ஷீட்டுகள், பஞ்சு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை ஊழியர்கள் யாரும் இல்லாத நேரத்தில், குடோனின் ஒரு பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி குடோனில் எரிந்த தீயை முற்ற்லும் அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. தீவிபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும் குடோன் அருகில் இருந்த பனைமரங்கள் கருகியது. தீ விபத்து ஏற்பட்ட உடன் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. தீ விபத்து குறித்து ஒரகடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்