அனைத்து ஊராட்சிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை, அமைச்சர் பாஸ்கரன் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.;
சிவகங்கை,
கல்லல் அருகே உள்ள பனங்குடி ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ் ரூ. 6 லட்சத்து 50ஆயிரம் செலவில் அமைக் கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்து பேசியதாவது:-
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் போதிய அளவு குடிநீர் வழங்குவதற்காக ரூ.15 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சுகாதாரத்தை பாதுகாக்கும் விதமாக அனைத்து பகுதிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் பனங்குடி ஊராட்சியில் 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர் மட்ட நீர்த் தேக்க தொட்டியில் உள்ள குடிநீரை சுத்திகரிப்பு எந்திரங்கள் மூலம் சுத்திகரித்து தூய்மையான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணிகள் முழு முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் புதிய கால்நடை கிளை மருந்தகம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் அரசு ஆரம்ப சுகாதார வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பணிகளும் செய்து தரப்படும். புதிய சமுதாயக் கூடம் அமைப்பதற்கான பணிகள் மற்றும் உயர் கோபுர மின்விளக்குகள் 2 இடங்களில் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர் பர்ணபாஸ்அந்தோணி, ஒப்பந்ததாரர் ஒமேகா கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் ஜெயகுணசேகர் மற்றும் சேவியர், ராயப்பன்ா சசிகுமார் வக்கீல் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.