விஷம் கலந்த மதுவை குடித்த அண்ணன்-தம்பி சிகிச்சை பலனின்றி சாவு

கோத்தகிரியில் விஷம் கலந்த மதுவை குடித்த அண்ணன்-தம்பி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-03-06 21:30 GMT
கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டபெட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜெயகுமார் (வயது 42). இவருடைய தம்பி பூஞ்செழி (வயது 35). இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்கள் இரு வருக்கும் திருமணம் ஆக வில்லை. பூஞ்செழி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த அவர் கடந்த 3-ந் தேதி இரவு 7 மணிக்கு வீட்டில் வைத்து மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு தனது அறைக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் தாமதமாக வீட்டிற்கு வந்த அவரது அண்ணன் ஜெயகுமார் டம்ளரில் மதுபானம் இருப்பதை பார்த்து உள்ளார். அதில் விஷம் கலந்து இருப்பது தெரியாமல் அவர், டம்ளரில் கூடுதலாக மது வை கலந்து குடித்து உள்ளார். அதன்பிறகு சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி ஏற்பட்டு உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயகுமார் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித் துள்ளார். உடனே அவர்கள் விரைந்து வந்து ஜெயக்குமார் மற்றும் அவரது தம்பி பூஞ்செழி ஆகிய 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி பூஞ்செழி, ஜெயகுமார் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுவில் விஷம் கலந்து குடித்த அண்ணன்- தம்பி இறந்த சம்பவம் சோகத் தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்