புதிய கட்சிகள் தொடங்கப்படுவதால் பா.ம.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை, ஈரோட்டில் ஜி.கே.மணி பேட்டி
புதிய கட்சிகள் தொடங்கப்படுவதால் பா.ம.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஜி.கே.மணி கூறினார்.;
ஈரோடு,
ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் எம்.வேலுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் கோபால், முத்துக்குமார், கிருபாகரன், மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் பொ.வை.ஆறுமுகம் வரவேற்று பேசினார்.
இதில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தமிழகத்தில் பல ஆண்டுகளாக நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. புதிய அணைகள் எதுவும் கட்டப்படவில்லை. மேலும், ஏற்கனவே உள்ள நீர் நிலைகளும் பாதுகாக்கப்படாமல் உள்ளது. எனவே நாம் நீர் ஆதாரத்தை இழந்து வருகிறோம்.
காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு, பவானி ஆகிய நதிகளின் உரிமையை தமிழகம் இழந்து வருகிறது. உரிமையை பெற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. உதாரணமாக காவிரி ஆற்றில் தமிழகத்தின் பங்கில் இதுவரை 171 டி.எம்.சி. தண்ணீரை நாம் இழந்து விட்டோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தமிழகமும், கர்நாடகமும் சகோதரத்துவ மாநிலங்கள். இந்த மாநிலங்களை இரு கண்களாக மத்திய அரசு பார்க்க வேண்டும். ஆனால் கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மத்திய அரசு மறைமுக சாதகமாக செயல்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் ஈரோடு ஒயாசிஸ் ஓட்டலில் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. கூட்டத்துக்கு பா.ம.க. இளைஞர் அணி மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்குகிறார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த கூட்டம் கட்சி சார்பற்றது.
பவானி ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணை கட்டுவதாக கேரள அரசு அறிவித்தது. இதில் 2 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு விட்டன. 3-வதாக தடுப்பணையை கட்டும் நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. எனவே பவானி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை தடுத்து நிறுத்தக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமையில் வருகிற 11-ந் தேதி பகல் 11 மணிக்கு அட்டப்பாடி அருகே தடுப்பணை கட்டப்படும் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் வறட்சி அதிகமாக இருக்கும். எனவே குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,700 கோடி நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். புதிய கட்சிகள் தொடங்கப்படுவதால் பா.ம.க.வுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.
இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.