மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
திருமருகல் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமருகல்,
நாகை மாவட்டம் திருமருகல் அருகே ஆதினக்குடி மெயின்ரோட்டில் மளிகை கடை நடத்தி வருபவர் கண்ணன்(வயது45). இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அவர் நேற்று காலை கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் கடைக்குள் சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கல்லாவில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 3 மாதங்களில் இப்பகுதியில் அடிக்கடி திருட்டு நடக்கிறது. எனவே போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த திருட்டுக் கும்பலை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இரவு நேரங்களில் இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.