வருமான வரி செலுத்தியதை முறையாக பதிவு செய்ய தவறினால் அபராதம் விதிக்கப்படும்
வருமான வரி செலுத்தியதை முறையாக பதிவு செய்ய தவறினால் அபராதம் விதிக்கப்படும் அதிகாரி எச்சரிக்கை.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத்துறைகளின் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு, வருமானவரி செலுத்துவதில் உள்ள புதிய நடைமுறைகள் குறித்தும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலர்களுக்கு வருமானவரி பிடித்தம் செய்வதில் உள்ள சந்தேகங்களை போக்கும் வகை யிலான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது.
மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி முன்னிலை வகித்தார். திருச்சி மண்டல வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் ஆல்பர்ட் மனோகர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் வருமானவரி செலுத்துவது தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்து, வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் பேசுகையில், பணம் பெற்று வழங்கும் அனைத்து அலுவலர்களும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அலுவலர்கள் அனைவரும் வருமான வரியினை முறையாக தாக்கல் செய்துள்ளனரா? என்பதை கண்காணிக்க வேண்டும்.
வருமான வரி செலுத்தி பின்னர் அதனை முறையாக பதிவு செய்வதும் முக்கியமானதாகும். வருமான வரி செலுத்திய பிறகும் கூட அதனை பதிவு செய்யாமல் இருந்தால் அதற்காக அபராதம் விதிக்கும் சூழல் உருவாகிவிடும். எனவே, அனைவரும் வருமான வரி செலுத்தினாலும், வருமான வரி இல்லையென்றாலும் அதனை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். இந்த கூட்டத்தில் பெரம்பலூர் வருமான வரித்துறை அலுவலர்கள் லலிதா, அன்பழகன், திருச்சி வருமானவரி துறை அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.