தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய போது பஸ் மோதி காயமடைந்த மாணவி சாவு

தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய போது பஸ் மோதி காயமடைந்த சிகிச்சை பலனளிக்காமல் மாணவி சாவு

Update: 2018-03-06 21:15 GMT
உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே உள்ள வாசிநகரைச் சேர்ந்தவர் சன்னாசி. இவருடைய மகள் பெருமாயி (வயது 18). இவர் உசிலம்பட்டியில் பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு பஸ்சில் வீட்டுக்கு திரும்பினார். தொட்டப்பநாயக்கனூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடந்த போது, தேனியிலிருந்து மதுரைக்கு சென்ற தனியார் பஸ் மாணவி மீது மோதியது. அதில் பலத்த காயமடைந்த அவர், மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை மாணவி பெருமாயி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்