பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் வருகிற 10–ந்தேதி நடக்கிறது
நெல்லை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம், வருகிற 10–ந்தேதி(சனிக்கிழமை) நடக்கிறது.
நெல்லை,

இதுகுறித்து நெல்லை கலெக்டர்(பொறுப்பு) முத்துராமலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
குறைதீர்க்கும் முகாம்
நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் ஒவ்வொரு மாதமும் தாலுகா அளவில் ஒவ்வொரு கிராமத்திலும் 2–வது சனிக்கிழமையன்று பொது வினியோக திட்டம் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம், குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் தலைமையில் நடைபெறும்.
அதன்பேரில் வருகிற 10–ந்தேதி (சனிக்கிழமை) நெல்லை தாலுகாவுக்கு உட்பட்ட டவுன் மாதா நடுவீதியிலும், பாளையங்கோட்டை தாலுகா வி.எம்.சத்திரத்திலும், சங்கரன்கோவில் தாலுகா குருக்கள்பட்டி கிராமத்திலும், தென்காசி தாலுகா மத்தாளம்பாறையிலும், செங்கோட்டை தாலுகா கணக்கபிள்ளை வலசையிலும் முகாம் நடக்கிறது.
சிவகிரி தாலுகா
சிவகிரி தாலுகாவுக்கு உட்பட்ட தாருகாபுரம் கிராமத்திலும், வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் கிராமத்திலும், ஆலங்குளம் தாலுகா ஆலங்குளத்திலும், அம்பை தாலுகா கல்லிடைக்குறிச்சி கிராமத்திலும், நாங்குநேரி தாலுகா மலையடிபுதூரிலும், ராதாபுரம் தாலுகா ராதாபுரத்திலும், கடையநல்லூர் தாலுகா பெரியசாமிபுரத்திலும், திருவேங்கடம் தாலுகா நடுவப்பட்டி கிராமத்திலும், மானூர் தாலூகா உக்கிரன்கோட்டை கிராமத்திலும், சேரன்மகாதேவி தாலுகா இலந்தைகுளம் கிராமத்திலும் முகாம் நடக்கிறது.
இந்த குறைதீர்க்கும் முகாமில் அந்தந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், தங்களுடைய ரேஷன் கார்டு, ரேஷன் கடையில் வழங்கும் பொருட்கள் குறித்த குறைகள் இருந்தால் புகார் தெரிவித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.