தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை

தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2018-03-05 22:55 GMT
செஞ்சி,

தமிழகம் முழுவதும் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பேசி வருகிறார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்மாம்பட்டு, நாட்டார்மங்கலம் ஆகிய இடங்களில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

தற்போதைய மக்கள் விரோத அரசு விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்படும். எனவே தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். உண்மையான ஜெயலலிதா ஆட்சியை உங்களுக்கு வழங்க எங்களுக்கு ஆதரவு தாருங்கள். தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் சரியான முறையில் வழங்கப்படுவது இல்லை. ஏராளமான முதியோர் களுக்கு ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் வருகின்றன.

மக்கள் விரோத இந்த ஆட்சி நீக்கப்பட வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சங்கராபரணி ஆற்றில் நடந்து வரும் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுப்போம்.

மேலும் இப்பகுதியில் தொழில் பயிற்சி மையம் அமைக்கப்படும். முக்கியமாக கடந்த 8 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார். முன்னதாக வல்லம் ஒன்றிய செயலாளர் சேகர் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், ஒன்றிய அவைத்தலைவர் முருகேசன், மாவட்ட தொழில் சங்க இணை செயலாளர் வல்லம் காந்தி, பாசறை செயலாளர் நூர்அலாவுதீன், ஒன்றிய நிர்வாகிகள் கண்ணப்பன், பொன்னுசாமி, பிரபா, செங்குட்டுவன், அண்ணாமலை, ராஜா, முருகன், வீரப்பன், சிவகுமார், ஏழுமலை பன்னீர்செல்வம், பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்