தாக்குதல் வழக்கில் ஜாமீன் வழங்க கோரி ஹாரீஸ் எம்.எல்.ஏ. மகன் சார்பில் மனு
தாக்குதல் வழக்கில் ஜாமீன் வழங்க கோரி ஹாரீஸ் எம்.எல்.ஏ. மகன் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
பட்டதாரி வாலிபரை தாக்கிய வழக்கில் ஜாமீன் வழங்க கோரி ஹாரீஸ் எம்.எல்.ஏ. மகன் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பட்டதாரி வாலிபரான வித்வத் ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டார்.
பெங்களூரு டாலர்ஸ் காலனியை சேர்ந்த தொழில்அதிபர் லோகநாத்தின் மகன் வித்வத், எம்.பி.ஏ. பட்டதாரி. இவரை, கடந்த மாதம் (பிப்ரவரி) 17-ந் தேதி சாந்திநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஹாரீசின் மகன் முகமது ஹாரீஸ் நலபட் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக தாக்கினார். இதுதொடர்பாக கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஹாரீஸ் நலபட் உள்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது இந்த வழக்கை பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வித்வத்தை தாக்கிய வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி பெங்களூரு 63-வது சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் முகமது ஹாரீஸ் நலபட் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் முகமது ஹாரீஸ் நலபட் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஐகோர்ட்டு ஏற்றுக் கொண்டது. விரைவில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
இதற்கிடையில், கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான வித்வத் பிப்ரவரி 17-ந் தேதியில் இருந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வித்வத் நேற்று முன்தினம் நள்ளிரவில் ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஏற்கனவே வித்வத்திடம் குற்றப்பிரிவு போலீசார் வாக்குமூலம் பெற்றுவிட்ட நிலையில், அவரது சகோதரரான சாத்விக்கிடமும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி போலீசார் தகவல்களை பெற்றுக்கொண்டனர்.