போலீசார் பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் டிரைவர் மனு
வாகன சோதனையின் போது போலீசார் பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை திரும்ப ஒப்படைக்க உத்தரவிடுமாறு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கார் டிரைவர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்தார்.
நாமக்கல்,
பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி அருகே உள்ள தேவம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். கார் டிரைவர். இவர் தனது மனைவி வைதேகி மற்றும் கைக்குழந்தையுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
கடந்த 1-ந் தேதி நானும், எனது மனைவியும் உறவினர் வீட்டிற்கு சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தோம். நாமக்கல்லில் இருந்து வேலகவுண்டம்பட்டி வழியாக வந்தபோது, வேலகவுண்டம்பட்டி ஆற்றுப்பாலம் அருகே மாலை 6 மணி அளவில் போலீசார் எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் நான் ஓட்டுனர் உரிமம், ஆர்.சி.புத்தகம் போன்ற ஆவணங்களை காண்பித்தேன். அந்த ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், ஒரு ரசீதை கொடுத்து ரூ.2,500 கொடுத்து விட்டு வண்டியை எடுத்து கொண்டு போங்கள் என்றார். அவர் கொடுத்த ரசீதில் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என எழுதப்படவில்லை.
இருப்பினும் என்னிடம் பணம் தற்போது இல்லை. வண்டியை கொடுங்கள், கோர்ட்டில் அபராத தொகையை செலுத்தி விடுகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் கோர்ட்டில் செலுத்த கூடாது, என்னிடம் பணத்தை கொடுத்து விட்டு வண்டியை எடுத்து கொண்டு போ, என கூறிவிட்டு எனது வண்டியை போலீஸ் நிலையம் எடுத்து கொண்டு போய் விட்டார்.
நாங்கள் போலீஸ் நிலையத்துக்கு நடந்து போய், இன்னும் 25 கி.மீட்டர் செல்ல வேண்டி உள்ளது, எங்களிடம் பஸ்சுக்கு கூட பணம் இல்லை. எனவே வண்டியை தாருங்கள் என கேட்டோம். ஆனால் பணத்தை கொடுத்து விட்டு வண்டியை எடுத்து போ, இதற்கு மேலே இங்கு பேசிக்கொண்டு இருந்தால், உன்னை அடித்து கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார்.
இரவு 10 மணி வரை காத்திருந்தும் வண்டியை தரவில்லை. வேறு வழியில்லாமல் நானும், எனது மனைவியும் கைக்குழந்தையுடன் சுமார் 25 கி.மீட்டர் நள்ளிரவில் நடந்தே ஊருக்கு போய் சேர்ந்தோம். போலீசார் வண்டியை பிடுங்கி வைத்து கொண்டதால், நான் கூலி வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே எனது வண்டியை திருப்பி ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் எங்களை சித்ரவதைக்கு உள்ளாக்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் செலுத்த வேண்டிய அபராத தொகை எவ்வளவு என்று தெரிவித்தால், அத்தொகையை நான் கோர்ட்டில் செலுத்தி விடுகிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.