விளைபொருட்களை எடைபோடாததால் விவசாயிகள் திடீர் சாலைமறியல்
விளைபொருட்களை எடை போடாததால் விவசாயிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
புதுவை தட்டாஞ்சாவடியில் விற்பனைக்குழு உள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களது போராட்டம் நேற்று 6-வது நாளாக நீடித்தது. அவர்களுக்கு ஆதரவாக எடைபோடும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் போராட்டம் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் கொண்டுவந்த நெல், மணிலா உள்ளிட்ட பொருட்கள் நூற்றுக்கணக்கான மூட்டைகள் எடைபோடப்படாமல் உள்ளன. புதுவையை சுற்றியுள்ள தமிழக பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நாள்தோறும் விற்பனைக்குழுவுக்கு வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் நேற்று விவசாயிகள் விற்பனைக்குழு அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். ஆனால் அவர்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அவர்கள் காமராஜ் சிலை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். அதன்பின் போக்குவரத்து சீரானது.