பெண் போலீஸ் வீட்டில் துணிகர கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு

ராஜாக்கமங்கலம் அருகே பெண் போலீஸ் வீட்டில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2018-03-05 22:15 GMT
ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள வைராகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவர் சென்னையில் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி, சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். வேலையின் காரணமாக கணவன்-மனைவி 2 பேரும் சென்னையில் தங்கியிருப்பதால் வைராகுடியிருப்பில் மகேஷின் தாயார் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகேஷ், தனது தயாரை சென்னைக்கு அழைத்து சென்றார். பின்னர், மகேஷின் தாயார் ஊர் திரும்பியபோது, வீட்டின் கதவுகள் உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தது. வீட்டில் பணம், நகை இல்லாததால் அங்கிருந்த பித்தளை பாத்திரங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

மற்றொரு வீட்டில்...

இதேபோல் மகேஷ் வீட்டின் அருகில் உள்ள தங்கராஜ் (வயது 41) என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் கதவை உடைத்து பணம், நகைகள் இல்லாததால் பித்தளை பாத்திரங்களை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. இந்த 2 துணிகர சம்பவங்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பெண் போலீஸ் வீடு உள்பட 2 இடங்களில் மர்மநபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்