மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தேங்காய், பழத்துடன் வந்து மனு
ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தேங்காய், பழத்துடன் வந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.;
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் இந்திரவள்ளி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், தங்களுடைய கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.
அப்போது பாரதிய பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் பசும்பொன் முத்தையா தலைமையிலான கட்சியினர் கையில் தாம்பூல தட்டில் தேங்காய், பழம், அதனுடன் மனுவை வைத்து கொண்டு வந்தனர். பின்னர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், நிலக்கோட்டையில் கடந்த 22-ந்தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி நடந்தது. அதில் அணைப்பட்டி-செம்பட்டி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. மேலும் சாலையோர கடைகள் மட்டும் அகற்றப்பட்டன. பல கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. எனவே, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும், என்று கூறியிருந்தனர்.
வேடசந்தூர் கரிக்காலியை சேர்ந்த பிச்சை என்பவர் கொடுத்த மனுவில், கரிக்காலி கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்து நிலத்தை மீட்டு தர வேண்டும், என்று கூறியிருந்தார்.
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள போடுவார்பட்டியை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நல்லதங்காள் ஆற்றில் அணை கட்டுவதற்கு கொத்தையம், போடுவார்பட்டி கிராம விவசாயிகள் நிலம் கொடுத்தோம். அதில், போடுவார்பட்டி கிராம விவசாயிகளுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனால் அணை கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறோம். உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சீனிவாசன் கொடுத்த மனுவில், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதாரநிலையங்களில் தினக்கூலி அடிப்படையில் மாநிலம் முழுவதும் 5 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறோம். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
முன்னாள் ராணுவ வீரர்களின் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க தேவையான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் தங்களுடைய ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க சென்றால் கட்டணம் கேட்கின்றனர். எனவே, கட்டண விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திண்டுக்கல் மாவட்ட முப்படை முன்னாள் வீரர்கள் நலச்சங்க தலைவர் ராஜு மனு கொடுத்தார்.
அதேபோல் திண்டுக்கல் அருகேயுள்ள குளத்தூர் லட்சுமணபுரத்தில் சந்தானவர்த்தினி ஆற்றில் ஒரு தரப்பினர் அனுமதி இல்லாமல் மணல் அள்ளி செல்கின்றனர். மணல் திருட்டை தடுக்க சென்றால் மிரட்டுகின்றனர். இந்த மணல் திருட்டால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.