காவிரி பிரச்சினையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதை தடுக்க பா.ஜ.க. முயற்சி
காவிரி பிரச்சினையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதை தடுக்க பா.ஜ.க. முயற்சி செய்வதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்
மன்னார்குடி,
தமிழக காவிரி விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முன்னதாக மன்னார்குடி ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், தஞ்சை மண்டல தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோம.தமிழார்வன், மாவட்ட தலைவர் சுப்பையன் நகர தலைவர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் உள்ள கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஒன்றியத்திற்கு தலா 50 விவசாயிகள் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி பிரச்சினையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்து, ஒத்த கருத்தோடு செயல்படுவதை தடுக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. இதற்கு இடமளித்து விடக்கூடாது. பிரதமர் மோடி, தமிழக அரசியல் தலைவர்கள் சந்தித்து பேச அனுமதி மறுப்பதை கண்டித்தும், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அவசியத்தை பிரதமரிடம் எடுத்துக்கூறி தமிழக அனைத்து கட்சி, விவசாயிகள் சங்க தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பதற்கு அனுமதி பெற்று தர வலியுறுத்தியும் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையை ஆயிரக்கணக்கான விவசாயிகளோடு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.