நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் தீ விபத்து: நவீன ஆய்வகம், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்
நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் நவீன ஆய்வகம், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம் அடைந்தது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
நாகப்பட்டினம்,
நாகை 2-வது கடற்கரை சாலையில் மீன்வள பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகம் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டது. மேலும், இந்த பல்கலைக்கழகத்துக்காக நாகூர் அருகே பனங்குடி கிராமத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதி கட்டிட வேலைகள் முடிவுற்ற நிலையில் பல்கலைக்கழகத்தில் சில வகுப்புகள் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.
இருப்பினும் ஆய்வகம், துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அலுவலகங்கள் 2-வது கடற்கரை சாலையில் உள்ள பழைய பல்கலைக்கழக கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அதிகாரிகள் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இரவு காவலர்கள் மட்டும் பணியில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் நள்ளிரவில் பல்கலைக்கழகத்தின் தரை தளத்தில் இயங்கி வரும் அதிநவீன ஆய்வகம் மற்றும் பேராசிரியர்கள் அறை உள்பட 3 அறைகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. பின்னர் இந்த தீ கொளுந்துவிட்டு எரிய தொடங்கியுள்ளது. இதைக்கண்ட காவலாளிகள் உடனடியாக நாகை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் அறைகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் நவீன ஆய்வகம் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாயின. இதில் நவீன ஆய்வகத்தில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இந்த தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கு மின் கசிவு தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மீன்வள பல்கலைக்கழகம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்படப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் பரவியது. இதற்கு நாகையில் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது திடீர் தீவிபத்து ஏற்பட்டு ஆவணங்கள் எரிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.