கடைகள் நிறைந்த பகுதி அருகே காய்ந்த கருவேல மரங்கள் தீப்பற்றி எரிந்தன
பொன்மலைப்பட்டியில் கடைகள் நிறைந்த பகுதி அருகே காய்ந்த கருவேல மரங்கள் தீப்பற்றி எரிந்தன. துறையூர் அருகேயும் புற்களில் தீப்பற்றி எரிந்தது.
பொன்மலைப்பட்டி,
திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள கடைவீதி வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் நிறைந்த பகுதியாகும். கடைகள் ஒருபுறமும், மறுபுறம் ரெயில்வேக்கு சொந்தமான இடம் உள்ளது. அதில் பாதுகாப்பு தடுப்பு சுவர்களும் உள்ளன. அந்த சுவர்களின் ஓரத்தில் இறைச்சி கடைகளும், ஏராளமான மரங்களும் உள்ளன. அந்த தடுப்பு சுவர் ஓரத்தில் வெட்டப்பட்ட கருவேல மரங்கள் குவியல், குவியலாக வைக்கப்பட்டு இருந்தன. அதில் இருந்து நேற்று திடீரென்று புகை வந்தது. சிறிது நேரத்தில் காய்ந்த கருவேல மரங்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது.
உடனடியாக அருகில் இருந்த வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டன. மேலும் அருகில் இருந்தவர்கள் திருச்சி மாவட்ட தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்களில் அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து, சுமார் 3 மணி நேரமாக கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர்.
இச்சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் எரிந்து நாசமாயின. தானாக தீப்பற்றி எரிந்ததா? இல்லை, யாரேனும் பற்ற வைத்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதே போல் ஒரு வாரத்திற்கு முன்பு இச்சம்பவம் நடைபெற்ற இடம் அருகில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது.
துறையூரை அடுத்த காளிப்பட்டி கிராமத்தில் உள்ள முத்தமிழ் நகரில் வசித்து வருபவர் சங்கர்(வயது 48). இவர் துறையூரில் உள்ள மின்வாரியத்தில் மின் பாதை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு முத்தமிழ் நகரில் வீடும், வீட்டிற்கு அருகில் சொந்தமாக 1 ஏக்கர் நிலமும் உள்ளது. தற்போது அந்த நிலம் விவசாயம் செய்யாமல் தரிசாக உள்ளது. இதனால் அந்த நிலம் முழுவதும் கோரைப்புற்கள் வளர்ந்து, காய்ந்த நிலையில் இருந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் அந்த நிலத்தில் வளர்ந்திருந்த கோரை புற்களில் தீ வைத்து விட்டு ஓடிவிட்டார்கள். கொழுந்து விட்டு எரிந்த தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு பரவ ஆரம்பித்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து துறையூர் தீயணைப்பு வீரர்கள் ராஜ்குமார், பாலசந்திரன், சண்முகபிரியன் உள்ளிட்டோர் விரைந்து சென்று தீயை அணைத்தார்கள்.
இதற்கிடையே குடியிருப்பு பகுதிக்கு அருகில் பரவிய தீயை பொதுமக்களே வீட்டில் இருந்த தண்ணீரை ஊற்றி அணைத்தார்கள். இதனால் அந்த பகுதியில் உள்ள 2 குடிசைகள் உள்பட 15 வீடுகள் தீயில் இருந்து தப்பின. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. திடீரென்று இரவில் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.