பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகை
செம்பனார்கோவில் அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
செம்பனார்கோவில்,
நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே காலமநல்லூர் ஊராட்சியில் சுமார் 400 விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து தொடர் போராட்டம் நடத்தியும் தற்போதுவரை பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இந்த பகுதி விவசாயிகள் நேற்று ஆக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜெனார்த்தனம், தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு விவசாய சங்க பொறுப்பாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விவசாயிகள் உடனே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் முருகவேல், தாசில்தார் முருகேசன், கூட்டுறவு இணை பதிவாளர் சரவணகோபால், காப்பீட்டு நிறுவன அதிகாரி தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த மாத இறுதிக்குள் பயிர்க்காப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அதி காரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.