பெரம்பலூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: தர்ப்பூசணி-கரும்பு ஜூஸ் விற்பனை அமோகம்
பெரம்பலூரில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியிருப்பதால் தர்ப்பூசணி, கரும்பு ஜூஸ் உள்ளிட்டவற்றின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. மேலும் சில தேவைகளுக்காக மண்ணால் செய்யப்பட்ட பானை, ஜக், டம்ளர், செம்பு உள்ளிட்டவற்றை வாங்குவதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில், இரவுப்பொழுதில் பனிப்பொழிவு இருக்கிற போதிலும், பகல் நேரத்தில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. இதன் காரணமாக வேலை நிமித்தமாக வெளியே செல்பவர்கள், பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், சொந்த விஷயமாக போக்குவரத்தினை மேற்கொள்பவர்கள் உள்ளிட்டோர் வாட்டி வதைக்கும் வெயிலினால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் தொடக்கத்திலேயே இப்படி வெயில் வறுத்து எடுப்பதால், இனி ஏப்ரல், மே மாதங்களில் எப்படி சமாளிப்பது? என மக்கள் ஆங்காங்கே புலம்பி தள்ளியதை பார்க்க முடிகிறது. இதற்கிடையே காலை பொழுதில் பனிமூட்டமாக இருப்பதால் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்வது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இந்த நிலையில், கோடைக்காலத்தையொட்டி பெரம்பலூரில் தர்ப்பூசணி விற்பனை ஆங்காங்கே படுஜோராக நடந்து வருகிறது. பெரம்பலூர் புதிய பஸ்நிலையம், நான்குரோடு, பாலக்கரை, துறைமங்கலம், வெங்கடேசபுரம், சங்குபேட்டை, பழைய பஸ்நிலையம், துறையூர் ரோடு உள்ளிட்ட இடங்களில் தர்ப்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டு இருக்கின்றன. வெயிலின் தாக்கத்தினை பொருட்படுத்தாது நடந்து செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் தண்ணீர் தாகத்தினை போக்க தேடி சென்று தர்ப்பூசணியை வாங்கி சுவைத்து சாப்பிடுகின்றனர். தர்ப்பூசணி துண்டினை (பீஸ்) கடித்து சாப்பிட விருப்பப்படாதவர்கள் ஜூசாக வாங்கி குடிக்கின்றனர். அவற்றை வீடுகளுக்கும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
ஒரு கிலோ தர்ப்பூசணி (தரத்திற்கேற்றாற் போல்)- ரூ.12, ரூ.15, ரூ.18-க்கும், 1 பீஸ்- ரூ.10, ஜூசாக சாப்பிட 1 கப்- ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் கோட்டிகுப்பம், கோவை, மதுரை, கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து கொள்முதல் செய்து பெரம்பலூரில் விற்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தவிர சாலையோரங்களில் கரும்பு ஜூஸ், முலாம்பழம் ஜூஸ் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. கரும்பு ஜூஸ் ஒரு கப்-ரூ.15, ஐஸ் போட்ட ஜூஸ்-ரூ.10, முலாம் ஜூஸ் ஒரு கப்-ரூ.20-க்கும் விற்பனையாகிறது. உடலில் வெப்பத்தினை சீராக வைக்கவும், வறண்டு போன நாவிற்கு சுவையூட்டி குளிர்விக்கவும் இது போன்ற ஜூஸ் வகைகளை ஆர்வத்துடன் மக்கள் வாங்கி அருந்துகின்றனர். இது போல் இளநீர் கடைகளும் ஆங்காங்கே போடப்பட்டு விற்பனை நடக்கிறது. இளநீர் (அளவிற்கேற்றாற்போல்)- ரூ.25, ரூ.30, ரூ.35, ரூ.40-க்கும் செவ்விளநீர்-ரூ.35 லிருந்தும் விற்கப்படுகிறது. பழரசக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியபடி இருப்பதை காண முடிகிறது.
மேலும் பணி நிமித்தமாக வெளியே செல்பவர்கள் பலர் தங்களது பாட்டிலில் எலுமிச்சை ஜூஸ், மோர் உள்ளிட்டவற்றை தயாராக வைத்து கொள்வதை பார்க்க முடிகிறது.
அந்த வகையில், கோடைக்காலத்தையொட்டி முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோரின் நலன் கருதி பஸ்நிலையம், கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தண்ணீர்பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசாரின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு டிராபிக் சிக்னல் பகுதியில் தற்காலிக நிழற்குடை அமைத்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
ஏரியில் கொட்டி கிடக்கும் மண்ணை தங்களது கை வண்ணத்தால் பொருட்களாக மாற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக வசித்து வருகின்றனர். அலுமினியம், பிளாஸ்டிக் பொருட்கள் வருவதற்கு முன்பாக மண் பானைகளில் சோறு சமைப்பது, குழம்பு வைப்பது, தீப மேற்றுவதற்காக அகல்விளக்குகள், தானியங்களை சேமிக்க குதில் என பலவித மண்பாண்ட பொருட்களை பயன்படுத்தினோம். தற்போது அந்த நிலை மாறிவிட்டது.
மேலும் கோடைக்காலத்தையொட்டி காலசுழற்சிக்கு ஏற்ப மண்ணாலான ஜக், டம்ளர், செம்பு, வாட்டர் பாட்டில், கூஜா, தண்ணீர் ஊற்றி வைக்கும் பானை, வடைசுடுகிற சட்டி ஆகியவை பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் எதிரேயுள்ள கடைகளில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. காண்போரை கவரும் விதமாக உள்ள இந்த பொருட்களை பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். தண்ணீர் பானை-ரூ.100, ரூ.150, நல்லி வைக்கப்பட்ட பெரியபானை-ரூ.300, ரூ.400 மற்றும் செம்பு, டம்ளர்-ரூ.50, ஜக்-ரூ.125 முதல் 275 வரை, வடைசுடுகிற சட்டி-ரூ.160 முதல் ரூ.375 வரை விற்பனையாகிறது.