அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் போலீசார் மீது கற்கள் வீசிய மேலும் 3 வாலிபர்கள் கைது

அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் போலீசார் மீது கல்வீசிய மேலும் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-03-05 21:15 GMT
சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறையில் கடந்த 1-ந்தேதிமஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் வாடிவாசல் பகுதியில் சில இளைஞர்கள் நின்றுக்கொண்டிருந்ததால் காளைகள் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த போலீசார் அவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டினர்.

இதையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் சிலர் போலீசாரை நோக்கி கற்கள், செருப்புகள், கம்புகளை கொண்டு வீசி போலீசார் தாக்கினர். இதில் 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 போலீசார் காயம் அடைந்தனர். இதையடுத்து மஞ்சுவிரட்டு நடந்த அன்றே இந்த தாக்குதலில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் மதியானி கிராமத்தைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து மற்ற நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாக திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்செவல்பட்டியை சேர்ந்த முத்து(வயது22), நெற்குப்பையைச் சேர்ந்த விக்னேஷ்(19), சின்னையா(20) ஆகிய 3 வாலிபர்களை எஸ்.வி.மங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்