காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்று நம்பிக்கை இல்லை - நல்லகண்ணு
காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்ற நம்பிக்கை இல்லை என்று ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிதாவது:- திரிபுராவில் 25 ஆண்டு காலம் மாணிக் சர்க்கார் திறமையான நல்ல ஆட்சியை நடத்தினார். பி.ஜே.பி. பல சூழ்ச்சிகளைச் செய்து வெறற்ி பெற்றள்ளது.
திட்டமிட்டு பழங்குடியின மக்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக வெற்றி பெற்றுள்ளது. இது நாட்டிற்கு பெரும் ஆபத்து. தமிழகத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் மணல் கொள்ளைக்கு கூட்டாக இருந்து 33 ஆறுகளை பாழாக்கி விட்டனர். சட்ட விரோதமாக விதிகளை மீறி 3 அடிக்கு பதிலாக 100 அடிக்கு மணல் அள்ளப்படுகிறது.
இந்தியாவில் பல மாநிலங்களில் ஜே.சி.பி. எந்திரம் பயன்படுத்த தடை உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் வயல்வெளி உள்பட அனைத்து இடங்களிலும் ஜே.சி.பி. வைத்து மணல் அள்ளப்படுகிறது. தமிழ்நாடு பாலைவனமாக மாறி வருகிறது. ஆட்சியாளர்கள் தான் மணல் தட்டுப்பாட்டிற்கு காரணம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் இரு வாரங்கள் தான் உள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் பி.ஜே.பி. தேர்தலை சந்திக்க உள்ளதால் பிரதமர் கர்நாடகா அமைச்சரை சந்திக்க செல்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியின் போது நகரச் செயலாளர் ரவி, முன்னாள் எம்.பி.க்கள் லிங்கம், அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ராமசாமி உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.