மேலூர் அருகே திரவுபதி அம்மன் கோவில் திருவிழா: குறவன், குறத்தி வேடமிட்டு பக்தர்கள் காணிக்கை பெற்றனர்
மேலூர் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் குறவன், குறத்தி வேடமிட்டு பொதுமக்களிடம் காணிக்கை பெற்றனர்.
மேலூர்,
மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு திருவிழா 18 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் பூக்குழி இறங்க நேர்த்திக்கடன் வேண்டிய பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். முன்னதாக அவர்கள் குறவன், குறத்தி வேடமிட்டு மேளதாளத்துடன் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் காணிக்கை பெற்றனர்.
அதில் விதைநெல், ரூபாய்களை பொதுமக்கள் பக்தர்களுக்கு காணிக்கையாக வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் திருவாதவூர் மற்றும் அதனை சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விதை நெல் காணிக்கையாக கொடுக்கப்பட்டது. முன்னதாக இந்த நெல்லை பூக்குழி இறங்கும் பக்தர்கள் பக்குவப்படுத்தி கோவிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர்.
தொடர்ந்து அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்ட பின்பு, கோவில் முன்பு குண்டம் அமைக்கப்பட்டு, அதில் டன் கணக்கில் விறகுகளை கொண்டு வந்து போட்டு அடுக்கப்பட்டது. பின்பு பூசாரி வந்து குண்டத்தில் அக்னி வளர்க்க பூஜைகளை நடத்தினார். அதில் ஒரே ஒரு கற்பூரத்தின் மூலம் குண்டத்தில் தீ வளர்த்தார்.
அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் பூக்குழி இறங்கினர். இந்த திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டு அம்மனை வணங்கி சென்றனர்.