ராணுவ தளவாட பொருட்களை தயாரிப்பதின் மூலம் கோவையின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்
‘ராணுவ தளவாட பொருட்கள் மற்றும் உதிரிபாகங்களை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தயாரிப்பதற்கான ஆர்டர்களை பெறுவதின் மூலம் கோவையின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்’ என்று மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.;
கோவை.
இந்திய பாதுகாப்புத்துறை ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது குறித்த கண்காட்சி கோவை கொடிசியா நிரந்தர கண்காட்சி வளாகத்தில் நேற்று தொடங்கியது. கொடிசியா தலைவர் சுந்தரம் வரவேற்று பேசினார். கண்காட்சியை மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசிய தாவது:-
உலகில் உள்ள நாடுகள் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதின் மூலம் சிறந்த பொருளாதார வளர்ச்சியை பெறுகின்றன. அந்த வளர்ச்சி இந்தியாவிலும் உருவாக வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இந்த புதிய முயற்சியை கொண்டு வந்துள்ளது. இதனால் ராணுவ ரகசியம் கசிய வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். அது தவறு. ராணுவ தளவாட பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தால் நமது ரகசியம் உலக நாடுகளுக்கு தெரியும். ஆனால் அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கும் போது நம் நாட்டு மக்கள் ரகசியத்தை வெளியே சொல்ல மாட்டார்கள்.
நம் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் ஆயுதங்களை வாங்கி குவிப்பதால் நாமும் எதிர்காலத்தில் ஆயுதங்களுக்காக பெரும் தொகை செலவிட வேண்டிய நிலையில் இருக்கிறோம். உள்நாட்டிலேயே தயாரிப்பதின் மூலம் ராணுவத்துக்கு செலவிடுவதில் பெரும் தொகையை மிச்சப்படுத்த முடியும். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, சேலம், ஓசூர் ஆகிய நகரங்களை இணைத்து ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் வழித்தடத்தை மத்திய அரசு உருவாக்க உள்ளது.
இந்த கண்காட்சியில் வைக் கப்பட்டுள்ள ராணுவ தளவாட பொருட்களை கோ வையில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோர்கள் தயாரிப்பதின் மூலம் கோவையின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். இதன் மூலம் கோவை தொழில் முனைவோர்கள் 8 ஆண்டுகளுக்கு ஆர்டர்களை பெறுவார்கள்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தான் வளர்ச்சி பெற முடியும். கட்சிகள் அரசியல் ரீதியாக செயல்பட்டாலும் அது பொருளாதார வளர்ச்சியை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் முழுவளர்ச்சி பெற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், ராணுவ தளவாட பொருட்கள் தயாரிப்பு அமைப்பின் இயக்குனர்கள் ரவின் குல்ஷேத்ரா, சுப்ரதா சகா, கோவை தொழில் மற்றும் வர்த்தக சபை தலைவர் வனிதாமோகன், கொடிசியா கவுரவ செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கண்காட்சியை தொடங்கி வைத்த சி.பி.ராதாகிருஷ்ணன் அனைத்து அரங்குகளையும் சுற்றி பார்த்தார்.
இந்த கண்காட்சியில், 30 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 400-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்கு வைக்கப்பட்டுள்ள உதிரிபாகங்களை தயாரிக்க கோவை தொழில் முனைவோர் முன்வந்தால் அதற்கான ஆர்டர் அவர்களுக்கு வழங்கப்படும். இதற் கான கலந்துரையாடலும் தொடர்ந்து நடந்தது. கண்காட்சி இன்றும்(செவ்வாய்க் கிழமை) நடக்கிறது.