பெஸ்ட் பஸ் கட்டண உயர்வுக்கு மாநகராட்சி ஒப்புதல் எதிர்க்கட்சிகள் கண்டனம்
மும்பையில் பெஸ்ட் பஸ் கட்டண உயர்வுக்கு மாநகராட்சி ஒப்புதல் அளித்து உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
மும்பை,

பெஸ்ட் பஸ் கட்டணம்
மும்பையில் மின்சார ரெயில் சேவைக்கு அடுத்தபடியாக, பெஸ்ட் பஸ் சேவைகளை ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பெஸ்ட் பஸ்கள் நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், நஷ்டத்தை சமாளிப்பதற்கு பஸ் கட்டணத்தை உயர்த்த பெஸ்ட் குழுமம் முடிவு செய்து உள்ளது.
பெஸ்ட் குழுமத்தின் இந்த முடிவுக்கு மாநகராட்சி ஒப்புதல் அளித்து உள்ளது. இதன்படி பஸ் கட்டணம் ரூ.12 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் முதல் 2 கி.மீட்டர் பயணிப்பதற்கான அடிப்படை கட்டணம் ரூ.8 மற்றும் 4 கி.மீ. பயணிப்பதற்கான ரூ.10 கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன்பின்னர் பயணிக்கும் தூரத்தினை பொறுத்து கட்டணத்தில் ரூ.1 முதல் ரூ.12 வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கண்டனம்
இதேபோல மாதாந்திர பாஸ் கட்டணமும் ரூ.40 முதல் ரூ.360 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான பாஸ் 50 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த கட்டண உயர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. பெஸ்ட் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இது குறித்து மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ரவிராஜா கூறுகையில், ‘கட்டண உயர்வை அமல்படுத்த ஆர்வம் காட்டுவதற்கு முன் பெஸ்ட் குழுமம் பயணிகளுக்கு சிறப்பான சேவையை அளிக்க ஆர்வம் காட்டவேண்டும்’ என்றார்.