இணையவழி பதிவுகளை மேற்கொள்ள நில அளவைத்துறை வட்ட துணை ஆய்வாளர்களுக்கு மடிக்கணினி கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்
இணையவழி பதிவுகளை மேற்கொள்ள நில அளவைத்துறை வட்ட துணை ஆய்வாளர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்.
விழுப்புரம்,
நில அளவை பதிவேடுகள் துறையில் பட்டா மாறுதல் நடவடிக்கைகள் அனைத்தும் இணைய வழியிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்களது பட்டா மாறுதல் மனுக்களை குறிப்பிட்ட பொது சேவை மையங்கள் மூலம் இணைய வழியில் பதிவு செய்து சிட்டா நகல்களை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 தாலுகாக்களிலும் பட்டா மாறுதல் பணிகள் அனைத்தும் இணையவழி மூலமாகவே நடைபெற்று வருகிறது. இதற்காக வட்ட அலுவலகங்களில் பணிபுரியும் நில அளவை பணியாளர்களுக்கு இணையவழி பட்டா மாறுதல் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக மடிக்கணினிகள் வழங்கப்படும் என அரசு அறிவித்தது
அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட துணை ஆய்வாளர்களுக்கும் மாவட்ட கலெக்டர் சுப்பிர மணியன் மடிக்கணினிகளை வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குனர் சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.