கணவருடன் சேர்த்து வைக்க கோரி தஞ்சை கோர்ட்டு வளாகத்தில் பெண் வக்கீல் தர்ணா போராட்டம்
கணவருடன் சேர்த்து வைக்க கோரி தஞ்சை கோர்ட்டு வளாகத்தில் பெண் வக்கீல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை சீனிவாசபுரத்தில் உள்ள சீனிவாசா நகரை சேர்ந்தவர் அன்பழகன்(வயது33). இவர் தஞ்சை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சரண்யாவுக்கும்(27) கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந் தேதி திருமணம் நடைபெற்றது. சரண்யாவும் தஞ்சை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவனும், மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு தஞ்சை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் அன்பழகன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில் தஞ்சை முதலாவது ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண்யா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நிரந்தர வசிப்பு இடமோ, வருமானமோ இல்லாமல் வயதான பெற்றோர்களுக்கு பாரமாக இருக்கிறேன். கணவர் என்ற முறையில் உணவு, உறைவிடம் மற்றும் பராமரிப்பு செய்ய வேண்டியது கடமை. அந்த கடமையை எனது கணவர் செய்ய தவறியதால் உரிய இடைக்கால பரிகாரம் வேண்டி மனு தாக்கல் செய்துள்ளேன். கணவர் வீட்டில் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளேன். கணவர் வீட்டில் வாழ்வதற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை மாஜிஸ்திரேட்டு விசாரித்து தள்ளுபடி செய்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு தஞ்சை கோர்ட்டிற்கு சென்ற சரண்யா திடீரென முதலாவது மற்றும் 2-வது ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளின் படியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதை அறிந்த வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மூத்த வக்கீல்கள் வந்து சரண்யாவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த சமரசத்தையும் ஏற்று கொள்ளாமல் தனது போராட்டத்தை அவர் தொடர்ந்தார். விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்ட சரண்யா நேற்றும் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தார். இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரண்யாவை வீட்டிற்கு செல்லும்படி கூறினர். ஆனால் அவர் கேட்க மறுத்துவிட்டார். கோர்ட்டு வளாகத்தில் பெண் வக்கீல் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது போராட்டம் குறித்து சரண்யா கூறியதாவது:-
எங்கள் திருமணத்தின்போது 30 பவுன் நகையும், கணவருக்கு 4 பவுன் நகை, ரூ.2½ லட்சம் மதிப்பில் வீட்டிற்கு தேவையான பொருட்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை சீதனமாக கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியுடன் தான் வாழ்ந்து வந்தோம். ஆனால் கணவர் வீட்டில் உள்ளவர்களுக்கு என் மீது கோபம் ஏற்பட்டு, என்னை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அதற்காக என் மீது நகையை திருடியதாக பொய்யான குற்றச்சாட்டு கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டனர்.
இதை எனது கணவரும் தடுக்கவில்லை. தற்போது எனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன். எதிர்கால வாழ்க்கை பற்றி கேள்விகுறியுடன் வாழ்ந்து வருகிறேன். கணவர் வீட்டில் வாழ்வதற்கு உரிமை உள்ளது. 20 நாட்கள் மட்டுமே எனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளேன். கணவர் வீட்டிற்கு சென்றால் என்னை அடித்து விரட்டி விடுகிறார்கள். எனக்கு யாரும் ஆதரவு கொடுப்பதில்லை. எனவே எனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும். இதற்காக தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.