நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம்
நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகர்கோவில்,
அய்யா வைகுண்டரின் அவதார தின விழா மாசி மாதம் 20-ந்தேதி, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் அய்யா வைகுண்டரின் 186-வது அவதார தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதற்காக அய்யா விஞ்சை பெற்ற திருச்செந்தூரில் இருந்தும், அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பில் இருந்தும் நேற்று முன்தினம் இரவே அய்யா வழி பக்தர்கள் வாகனங்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு வந்தனர். பின்னர் இரவில் நாகராஜா கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில் சமய மாநாடு நடந்தது.
இதனையடுத்து நேற்று காலை 5 மணி அளவில் சாமிதோப்பு தலைமைப்பதி சார்பில் அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்பு தலைமைப்பதி நோக்கி புறப்பட்டது. ஊர்வலத்துக்கு பூஜிதகுரு பையன்ராஜா தலைமை தாங்கினார். பூஜிதகுரு சுவாமி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை பூஜிதகுரு பால பிரஜாபதி அடிகளார் தொடங்கி வைத்தார்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யா வாகனத்துக்கு முன்னால் முத்துக்குடையும், சிறுவர்-சிறுமிகளின் கோலாட்டமும், சிங்காரி மேளமும், செண்டை மேளங்களும் சென்றன. தலைப்பாகை அணிந்து, காவி கொடி பிடித்தபடி அய்யா வழி பக்தர்கள் ‘அய்யா சிவ...சிவா...அரகரா...அரகரா... என்று பக்தி கோஷமிட்டவாறு சென்றனர். ஊர்வலத்துக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலைமை பதியை அடைந்தது. சாமி தோப்பில் முத்திரிகிணறு, தலைமைப்பதியில் பெரிய ரதவீதி மற்றும் பதியை சுற்றி வந்து பகல் 11.30 மணி அளவில் சாமிதோப்பு தலைமை பதியின் முன்பு அவதார தின ஊர்வலம் முடிவடைந்தது.
ஊர்வலத்தில் வந்த பக்தர் களுக்கு வழிநெடுகிலும் தண்ணீர், மோர், சர்பத், தர்ப்பூசணி போன்றவை வழங்கப்பட்டது.
சாமிதோப்பு தலைமை பதியில் நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வசந்தகுமார் எம்.எல்.ஏ. மற்றும் பக்தர்கள் அய்யாவை தரிசனம் செய்தனர்.
தலைமைப்பதி அருகில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு காலை, மதியம், இரவு உணவுகள் வழங்கப்பட்டன.
அவதார தினவிழாவில் குமரி மட்டுமல்லாமல் நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சாமிதோப்புக்கு நேற்று சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.