பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் விழுந்து விபத்து: 2 பேர் பலி
வாலாஜாபாத் அருகே பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் விழுந்து சென்னை கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியாகினர்.
வாலாஜாபாத்,
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் மோனிஷ்குமார் (வயது 20), விக்னேஷ்குமார் (23). இருவரும் நண்பர்கள். சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மோனிஷ்குமார் பேஷன் டெக்னாலஜி படித்து வந்தார். விக்னேஷ்குமார் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
இருவரும் அம்பத்தூரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தனர். நேற்று விடுமுறை என்பதால் வீட்டிற்கு செல்வதற்காக நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
வாலாஜாபாத் அருகே பண்ருட்டி பகுதியில் ஒரகடம் - வாலாஜாபாத் சாலையில் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது.
இதில் மோனிஷ்குமார், விக்னேஷ்குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்த ஒரகடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.