கூடுவாஞ்சேரி ரெயில்நிலையம் அருகே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை
கூடுவாஞ்சேரி ரெயில்நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட் வழியாக தான் மாடம்பாக்கம், ஆதனூர், ஒரத்தூர், குத்தனூர், காவனூர், கூடுவாஞ்சேரி, நந்திவரம் உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் வாகனங்களில் சென்று வந்தனர். இந்த ரெயில்வே கேட்டை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகள் மூடினார்கள்.
அந்த பகுதியில் கூடுவாஞ்சேரி-மாடம்பாக்கம் இடையே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு தற்போது பொதுமக்கள் மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் ஆதனூர், மாடம்பாக்கம், உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சென்னை நகர் பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வரும் போது கூடுவாஞ்சேரியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றிவந்து பின்னர்தான் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தின் வழியாக ஆதனூர், மாடம்பாக்கம் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே கூடுவாஞ்சேரி-மாடம்பாக்கத்தை இணைக்கும் சுரங்கப்பாதை பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் மட்டும் சுரங்கப்பாதை பணிகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், ரெயில்வே இடத்தில் இருந்து மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் சுரங்கப்பாதை பணி இன்னும் நடைபெறாமல் அப்படியே பாதியில் நிற்கிறது. இதனால் இந்த சுரங்கப்பாதையில் பல மாதங்களாக மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி தருகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
கூடுவாஞ்சேரி-மாடம்பாக்கம் இடையே புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் கட்டி பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று கூறலாம். ஏன் என்றால் இந்த மேம்பாலத்தை கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் இணைக்கும் பணி இன்னும் நடைபெறவில்லை. இதனால் ஆதனூர், மாடம்பாக்கம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள் சர்வீஸ் சாலை வழியாக 1 கிலோமீட்டர் சென்ற பின்னர்தான் ஜி.எஸ்.டி சாலையில் செல்ல முடியும்.
இதனால் சர்வீஸ் சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதியில் நிற்கும் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.