மேலப்பாளையத்தில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தடையை மீறி போராட்டம் 134 பேர் கைது

மேலப்பாளையத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 134 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-04 23:00 GMT
நெல்லை,


மேலப்பாளையம் சந்தை முக்கில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நேற்று மாலையில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் நிறுவன தலைவர் பாளை. ரபீக் தலைமை தாங்கினார். கொள்கை பரப்பு செயலாளர் முஸ்தபா, நெல்லை மாவட்ட தலைவர் சித்திக், செயலாளர் மைதீன், பொருளாளர் அஜ்மல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா அப்துல் ரகீம் மீது பொய் வழக்கு பதிவு செய்து, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைத்த போலீசாரை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது.


இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 134 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் செய்திகள்