வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்
நெல்லை மாவட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டரை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
நெல்லை,
தமிழக முதல்–அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது வேலைக்கு செல்லும் பெண்கள் ஸ்கூட்டர் வாங்கிக்கொள்ள ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அறிவித்தார். அவர் மறைந்த பின்னர் “அம்மா இருசக்கர வாகன திட்டம்“ என்ற பெயரால் தமிழக அரசால் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் சார்பில் முதற்கட்டாக வேலை செய்யும் 100 பெண்களுக்கு மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இதற்கான விழா பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு, பெண்களுக்கு ஸ்கூட்டர்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா பெண்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி தன்னம்பிக்கையுடன் வாழ்ந்திடவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அதன் ஒரு பகுதியாக அம்மா இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 455 பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக தற்போது 100 பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டு உள்ளது. வாகனங்களை பெறும் பெண்கள் தங்களது பணிகளையும், தொழில்களையும் சிறப்பாக செய்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் எம்.பி.க்கள் கே.ஆர்.பி.பிரபாகரன், விஜிலா சத்யானந்த், எம்.எல்.ஏ.க்கள் முருகையாபாண்டியன், மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத் தலைவர் சக்திவேல்முருகன், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், நெல்லை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.