பணியாளர்கள் பற்றாக்குறை கூடலூர் நகராட்சியில் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
கூடலூர் நகராட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் வளர்ச்சி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் குடிநீரும் முறையாக வினியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கூடலூர்,
தமிழகம்- கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் எல்லைகளை ஒட்டி கூடலூர் நகரம் அமைந்துள்ளது. மலைப்பாங்கான பள்ளத்தாக்குகள், பசுமை போர்த்திய புல்வெளிகள் என இயற்கை வளம் நிறைந்த நகரமாக உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 700 அடி உயரத்தில் கூடலூர் நகரம் உள்ளது. மைசூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நகரம் என்பதால் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. கடந்த 13.11.1931-ம் ஆண்டு ஊராட்சியாக, கூடலூர் பகுதி உருவானது. பின்னர் 6.9.1950-ம் ஆண்டு 3-ம் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இதன்பின்னர் 1.4.1963-ம் ஆண்டு முதல் நிலை பேரூராட்சியாகவும், 2.3.1974-ல் முதல் தேர்வு நிலை பேரூராட்சியாகவும், 11.6.2004 முதல் 3-ம் நிலை நகராட்சியாகவும், தொடர்ந்து 9.8.2010-ம் ஆண்டு 2-ம் நிலை நகராட்சியாக கூடலூர் தரம் உயர்த்தப்பட்டது. இதனால் இங்கு நகராட்சி கமிஷனர் பணியிடம் புதியதாக உருவாகியது. மேலும் நகராட்சி பொறியாளர், மேலாளர், பணி மேற்பார்வையாளர், வருவாய் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டது.
கூடலூர் நகராட்சி அலுவலகம் ஆரம்பத்தில் ஓடுகள் வேய்ந்த பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதனால் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. மொத்தம் 47.71 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. இங்கு 49 ஆயிரத்து 535 பேர் வசித்து வருகின்றனர். கூடலூர் நகர மக்களுக்கு ஓவேலி ஹெலன், பல்மாடி, பாண்டியாறு உள்பட பல இடங்களில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர கூடலூர் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளுக்கு சுமார் 45 கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் 2-ம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டாலும் தற்போது வரை நிர்வாகம் மற்றும் வளர்ச்சி பணிகளில் முன்னேற்றம் பெறவில்லை. இந்த நகராட்சியில் பணிபுரிய வரும் சமவெளி பகுதியை சேர்ந்த அதிகாரிகள் குறிப்பிட்ட காலம் மட்டுமே இங்கு பணி புரிகின்றனர். பின்னர் காலநிலை மாற்றம், சொந்த ஊர்களுக்கு செல்ல நீண்ட தூர பயணம் உள்பட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு பணியிட மாற்றம் பெற்றுக்கொண்டு சென்று விடுகின்றனர்.
கூடலூர் நகராட்சியில் மேலாளர், பொறியாளர், வருவாய் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக கிடக்கிறது. இதில் சில வாரங்களுக்கு முன்பு வருவாய் ஆய்வாளர் பணியிடம் நிரப்பப்பட்டது. இதேபோல் பொறியாளர் பணியிடமும் சில மாதங்களுக்கு முன்பு தான் நிரப்பப்பட்டது. ஆனால் மிக விரைவாக அவர்களும் பணி இடமாறுதல் பெற்று சமவெளி பகுதிக்கு சென்று விட்டார்கள்.
இதுதவிர பணியாளர்கள் பணியிடங்களும் தொடர்ந்து காலியாக கிடப்பதால் நிர்வாகம், வருவாய், குடிநீர் பராமரிப்பு, சுகாதார பணிகள் உள்ளிட்ட வளர்ச்சி சார்ந்த பணிகள் முடங்கி கிடக்கிறது. திட்டமிட்டப்படி வளர்ச்சி பணிகளும் நடைபெறுவது இல்லை. மேலாளர் பணியிடம் காலியாக உள்ளதால் அலுவலக கோப்புகள் தேங்கி வருகிறது. இதேபோல் பொறியாளர் இல்லாததால் குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் முறையாக கிடைக்காமல் கூடலூர் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் நாள்தோறும் அவதி அடைந்து வருகின்றனர்.
நடுகூடலூர் பகுதி மக்கள் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தங்களது பகுதிக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது என கூறி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் கமிஷனர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்த நிலையில் நகராட்சி பொறியாளர் இடமாறுதல் பெற்று சென்று விட்டார். இதேபோல் பல்வேறு பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வினியோகம் முறையாக நடைபெறாததால் பொதுமக்கள் தண்ணீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் சுகாதார பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் கூடலூர் நகர பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து விட்டது. இதனை கண்காணித்து கொசு மருந்து அடிக்க சுகாதார பிரிவில் அலுவலர் இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கழிவுநீர் வாய்க்கால் பராமரிப்பின்றி காணப்படுகிறது. ஒட்டு மொத்தமாக சுகாதார பணிகள் முறையாக நடைபெறுவது இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது, குடிநீர், சுகாதாரம் குறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்துக்கு சென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பணியிடங்கள் தொடர்ந்து காலியாக இருக்கிறது. பணியில் உள்ள அதிகாரிகளும் அடிக்கடி ஊட்டியில் நடைபெறும் ஆய்வு கூட்டங்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அலைக்கழிக்க படுகின்றனர்.
எனவே கூடலூர் நகராட்சியில் காலியாக உள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணியிடங்களை விரைந்து நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். நகராட்சி கமிஷனர் பார்வதி கூறும்போது, கூடலூர் நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரையில் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று கூறினார்.