கைகள் இல்லாவிட்டாலும் சைக்கிள் ஓட்டலாம்!

அமெரிக்காவை சேர்ந்த ரூத் எவிலின் பிராக்கே என்ற பெண் குழந்தை இரு கைகளும் இல்லாமல் பிறந்தது.;

Update: 2018-03-04 07:15 GMT
ரூத் எவிலின் பிராக்கேவிற்கு இப்போது அதற்கு ஐந்து வயது. கைகள் இல்லாவிட்டாலும் உற்சாகம் குறையாமல் மற்ற குழந்தை களுடன் சந்தோஷமாக வலம் வருகிறது. மழலைப் பருவ விளையாட்டுக்கள் அத்தனையையும் விளையாடி அது மகிழ்ந்து கொண்டிருக்கிறது.

காலையில் எழுந்ததும் பல் துலக்குவது, காபி பருகுவது போன்ற செயல்களை செய்வதற்கு கால் விரல்களையே பயன்படுத்திக்கொள்கிறது. ஓவியம் வரைவது இந்த சிறுமிக்கு பிடித்த பொழுதுபோக்காக இருக்கிறது. அதற்கும் கால் விரல்களே பயன்படுகிறது. வழக்கமாக சராசரியானவர்கள் எதற்கெல்லாம் கைவிரல்களை பயன்படுத்துவார்களோ அத்தனை வேலைகளையும் கால் விரல்களால் லாவகமாக செய்கிறாள் இந்த சிறுமி.

ரூத் எவிலினுக்கு சைக்கிள் ஓட்ட வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருந்திருக்கிறது. மகளின் ஆசையை நிறைவேற்ற பெற்றோர் தீவிரமாக ஆலோசித்திருக்கிறார்கள். இறுதியில் பி.வி.சி. பைப்புகள் மற்றும் பிளாஸ்டிக்குகளை கொண்டு முதுகுப்புறத்தில் பொருத்துமாறு சாதனம் ஒன்றை உருவாக்கி அதனை ‘ஹேண்ட்பாருடன்’ இணைக்கும் வகையில் வடிவமைத்து கொடுத்தார்கள். முதுகில் தாங்கிப் பிடித்து, பெல்ட் போன்று நீண்டு கொண்டிருக்கும் அதனை இருபுறமும் சைக்கிள் கைப்பிடிகளில் பொருத்திக்கொண்டு ரூத் எவிலின் உற்சாகமாக சைக்கிள் ஓட்டுகிறாள். வளைவான பகுதிகளில் தன் உடல்பாகங்களை வளைத்து சைக்கிளை திருப்புகிறாள். அவள் சைக்கிள் ஓட்டும் விதம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி பலருடைய கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

மேலும் செய்திகள்