தாராவியில் ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை நெல்லையை சேர்ந்தவர்

தாராவியில் ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் நெல்லையை சேர்ந்தவர் ஆவார்.

Update: 2018-03-03 22:45 GMT
மும்பை,

தாராவியில் ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் நெல்லையை சேர்ந்தவர் ஆவார்.

ஆசிரியை

மும்பை தாராவி, டிரான்சிஸ்ட் கேம்ப் பகுதியில் வசித்து வருபவர் சித்திரை பாண்டி. இவரது மகள் சுரேகா(வயது25). இவர் சயான் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை ஆசிரியை சுரேகா மற்றும் அவரது தாய் மட்டும் வீட்டில் இருந்தனர். இந்தநிலையில் ஆசிரியை வீட்டின் மேல் தளத்திற்கு சென்றார். வெகுநேரமாகியும் கீழே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் மேலே சென்று பார்த்தார். அப்போது சுரேகா தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உயிரிழப்பு

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து சுரேகாவை மீட்டு சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுரேகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாராவி போலீசார் ஆசிரியை சுரேகா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூக்கில் தொங்கி உயிரை மாய்த்து கொண்ட ஆசிரியை சுரேகாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம், கூடங்குளம் என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்