கல்யாண வெங்கடரமண சாமி கோவிலில் தெப்ப உற்சவம்

தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சாமி கோவிலில் முன்னாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஏ.பி.ராமசாமி ஏற்பாட்டின் கீழ் நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது.

Update: 2018-03-03 22:15 GMT
கரூர்,

தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சாமி கோவிலில் முன்னாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஏ.பி.ராமசாமி ஏற்பாட்டின் கீழ் நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடரமண சாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப் பட்டது.

மேலும் செய்திகள்