மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிரியாவில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-03 21:45 GMT
இளையான்குடி,

சிரியாவில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்து இளையான்குடி பஸ் நிலையம் அருகில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் நகரச் செயலாளர் உமர் கத்தாப் தலைமை தாங்கி உரையாற்றினார். மாநில பொருளாளர் ஹாருன்ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மவுலா முகமதுநாசர் ஆகியோர் சிரியா தாக்குதல் குறித்து பேசினர். அப்போது சிரியாவில் நடப்பது மனித உரிமை மீறல். அகதிகளை விட மோசமான நிலையில் அங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த செயலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது ஐ.நா. சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்த மனித உரிமை மீறலுக்கு இந்தியா சார்பில் கண்டன குரல் எழுப்ப வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் சாகுல்ஹமீதுசேட் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்