வேப்பூர் அரசு கல்லூரிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் புத்தகம்

பெரம்பலூரில் நடைபெற்ற புத்தக திருவிழாவில், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 33 ஊராட்சிகள் சார்பாக ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் புத்தகம் வாங்கப்பட்டது.

Update: 2018-03-03 22:30 GMT
குன்னம்,

பெரம்பலூரில் நடைபெற்ற புத்தக திருவிழாவில், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 33 ஊராட்சிகள் சார்பாக ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் புத்தகம் வாங்கப்பட்டது. பின்னர் வாங்கப்பட்ட புத்தகங்களை ஆலத்தூர் ஊராட்சி சார்பில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூர் அரசு மகளிர் கல்லூரிக்கு வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயாளன் (வட்டார ஊராட்சி), இளங்கோவன் (கிராம ஊராட்சிகள்) ஆகியோர் கல்லூரிக்கு நேரில் சென்று கல்லூரி முதல்வர் சுப்ரமணி மற்றும் நூலகர், மாணவிகளிடம் வழங்கினர். 

மேலும் செய்திகள்