இயற்கை பேரிடர் காலத்தில் தகவல் தொடர்பு பாதிக்காமல் இருக்க புதிய தொழில்நுட்ப சாதனங்கள், அமைச்சர் மணிகண்டன் தகவல்
இயற்கை பேரிடர் காலத்தில் தகவல் தொடர்பு பாதிக்காமல் இருக்க புதிய தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தகவல் தொழில்நுட்பவியல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழாவுக்கு கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். முகாமை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் நலனுக்காக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தலைசிறந்த நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான இளைஞர்களை தங்களது நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்யும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது.
முகாமில் முதல்நாளில் மட்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்து 476 ஆண்கள், ஆயிரத்து 605 பெண்கள் பதிவு செய்து கலந்து கொண்டுள்ளனர். இளைஞர்களுக்கு தரமான கல்வி மற்றும் கல்விக்கு ஏற்ற வேலைவாய்ப்பு வழங்குவதன் மூலம் அவர்களுடைய குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சியடைவதோடு, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற உயரிய எண்ணத்தில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை அதிகரிக்க ஏதுவாக தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் மின்னணு பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
அதேபோல, கூகுள் நிறுவனத்தின் மூலம் சென்னையில் மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் நேரத்திலும் 20 கி.மீ. சுற்றளவில் தகவல் தொடர்பு பாதிக்காத வகையில் புதிய தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கு ஏதுவாக கூகுள் லூம் அமைக்கவும், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள 4ஆயிரம் கிராமங்கள் தேர்வு செய்து கூகுள் நிறுவனத்தின் மூலம் இணையதள பயன்பாடு குறித்து பயிற்சி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் நடராஜன் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்ட வேலைவாயப்பு அலுவலகத்தில் 63ஆயிரத்து 106 ஆண்கள்், 75ஆயிரத்து 394 பெண்கள் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரத்து 119 பேருக்கு பணி வழங்கப்பட்டுஉள்ளது. 435 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆயிரத்து 739 நபர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது. வேலைவாய்ப்பு முகாமை இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. சுமன், நாஸ்காம் தலைவர் ஸ்ரீதரன், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் குருநாதன், ராம்கோ தலைவர் முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஜெயஜோதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அபுபக்கர் சித்திக் உட்பட அரசு அலுவலர்கள், இளைஞர்கள் கலந்துகொண்டனர்.