திருமணம் நின்றதால் விரக்தி: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திருமணம் நின்றதால் விரக்தி அடைந்த வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த மேலவெளி ஊராட்சி திருநாவுக்கரசு நகரை சேர்ந்தவர் குப்பண்ணன். இவருடைய மகன் சதீஷ்(வயது29). இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதனால் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து, கடந்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் இந்த திருமணம் திடீரென நின்று விட்டது. இதனால் சதீஷ் விரக்தியில் இருந்துள்ளார்.
பெற்றோர், உறவினர்கள் சமாதானம் செய்தும் அவரால் சகஜநிலைக்கு வர முடியவில்லை. நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு சதீஷ் தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள், கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து குப்பண்ணன், கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.