குன்னூர் அருகே வளர்ந்துள்ளன உடலில் பட்டால் பாதிப்பை ஏற்படுத்தும் விஷ செடிகள், உடனே அகற்ற கோரிக்கை

உடலில் பட்டால் பாதிப்பை ஏற்படுத்தும் விஷ செடிகளை உடனே அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2018-03-03 21:30 GMT
குன்னூர்,

குன்னூர் அருகே மவுண்ட் பிளசன்ட் பகுதியில் பல தனியார் பள்ளிகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகள் அருகே சாலையோரத்தில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதில் விஷ செடிகளும் வளர்ந்துள்ளன. இந்த விஷ செடி மனிதர்களின் உடலில் பட்டால் அந்த இடம் மரத்து போய் விடு கிறது. எனவே இந்த பகுதியில் ஆய்வு செய்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ரவி, நந்தகுமார் ஆகியோர் ஊட்டியில் உள்ள மூலிகை ஆராய்ச்சியாளர் ராஜனிடம் தெரிவித்தனர். உடனே அவர், சம்பவ இடத் திற்கு வந்து மாதிரிகளை சேகரித்தார்.

இது தொடர்பாக ஆராய்ச்சியாளர் ராஜன் கூறியதாவது:-

இந்த விஷ செடி ‘அர்த்திகா‘ தாவர இனத்தை சேர்ந்தது. இந்தியாவிலேயே இது போன்ற செடிகள் இருந்ததாக இதுவரை தகவல்கள் இல்லை. வெளிநாடுகளில் இந்த செடிகள் இருந்திருக்கலாம். இந்த செடிகளில் உள்ள முட்கள் கைகளில் பட்டால் அந்த இடம் கல் போன்று மரத்துப்போய்விடுகிறது. புதர்கள் போன்று வளர்ந்துள்ள இந்த செடிகள் மீது யாராவது விழுந்தால், அவர்களின் சுய நினைவு இழக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் ரமேஷ் கூறுகையில், இந்த விஷ செடிகளால், குழந்தைகளுக்கு மிகுந்த ஆபத்து உள்ளது. எனவே, அந்த செடிகளை முழுமையாக அகற்ற நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது போன்ற விஷ செடிகளால் அரிய வகை தாவரங்களும், அழியக்கூடிய அபாயம் உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்