ஒகி புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ரூ.65¾ லட்சம் இழப்பீடு கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ரூ.65¾ லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வாழைகள் சேதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் 7 ஆயிரத்து 200 எக்டர் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த 29.11.2017 மற்றும் 30.11.2017-ல் ஒகி புயல் தாக்கியதில் திருச்செந்தூர், ஸ்ரீவை குண்டம், சாத்தான்குளம் தாலுகாக்களில் வாழை பயிர் செய்ததில் 488 எக்டர் பரப்பில் வாழை சேதம் அடைந்தது.எனவே அந்த விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கும் பொருட்டு ஒகி புயலால் பாதிக்கப்பட்ட வாழை பயிர்களுக்கான நிவாரணம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் படி பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து எக்டருக்கு ரூ.13 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிப்படைந்த திருச்செந்தூர் தாலுகாவில் சேர்ந்தமங்கலம், சேதுக்குவாய்த்தான், மேலஆத்தூர், ஆத்தூர், அங்கமங்கலம், சுகந்தலை, நல்லூர், புரையூர், நாலுமாவடி, ராஜபதி, அம்மன்புரம், கானம், வீரமாணிக்கம், மேலதிருச்செந்தூர், கீழதிருச்செந்தூர் மற்றும் மூலக்கரை கிராமங்களில் 873 விவசாயிகளுக்கும்,
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் முக்காணி, கொற்கை, கொட்டாரங்குறிச்சி, வாழவல்லான், கொடுங்கனி, கீழப்பிடாகை அப்பன்கோவில், வல்லநாடு, தோழப்பன்பண்ணை, முறப்பநாடு, நானல்காடு, மணக்கரை, கொங்கராயக்குறிச்சி, ஆறாம்பண்ணை ஆகிய கிராமங்களில் 166 விவசாயிகளுக்கும், சாத்தான்குளம் தாலுகாவில் அரசூர்-1, அரசூர்-2, நடுவக்குறிச்சி, கொம்மடிக்கோட்டை, திருப்பணி புத்தன்தருவை, சாஸ்தாவிநல்லூர், பள்ளக்குறிச்சி ஆகிய கிராமங்களில் 111 விவசாயிகளுக்கும் என மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 1,150 விவசாயிகளுக்கு ரூ.65 லட்சத்து 76 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. இந்த தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மின்னணு பரிவர்த்தனை மூலம் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
வாழ்வாதார பாதுகாப்பு திட்டம்
மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், வாழை விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு திட்டத்தில் வாழை சாகுபடி செய்ய ரூ.1 கோடியே 71 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ஒரு எக்டர் வாழை பயிர் செய்ய முதல் வருடம் ரூ.26 ஆயிரத்து 250-ம், 2-வது வருடம் ரூ.8 ஆயிரத்து 750-ம் என மொத்தம் ரூ.35 ஆயிரம் வாழை விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு திட்டத்தில் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.