ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ள பயன்படுத்திய பொக்லின் எந்திரம்-3 லாரிகள் பறிமுதல்

ஒரத்தநாடு அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக்லின் எந்திரம்-3 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

Update: 2018-03-03 22:45 GMT
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே அனு வாட்டாத்திக்கோட்டை-உப்புவிடுதிக்கு இடையே உள்ள ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வட்டாத்திக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிலர் பொக்லின் எந்திரம் மூலம் லாரியில் மணல் அள்ளி கொண்டு இருந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூர் நால்ரோட்டை சேர்ந்த செல்வம் மகன் விக்னேஸ்வரன் (வயது 23), கேவிக்கோட்டையை சேர்ந்த அற்புதம் மகன் அருண் (25) என்பதும், ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதும் தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக்லின் எந்திரம் மற்றும் 3 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்